Monday 18 May, 2009

" பசங்க " திரைப்படம் பார்த்தேன் வியந்தேன்

தமிழ் திரையுலகம் காணாத கதைக்களம் என்று கேள்வி பட்டதால் சென்று பார்க்க ஆவலாய் இருந்தது...ரொம்ப நாளைக்கப்புறம் குடும்பம் குடும்பமாக திரையரங்கு நிரம்பியிருந்தது (சிறுவயதில் பார்த்ததாக நினைவு) மிகவும் ஆச்சரியமாக இருந்தது எனக்கு.......வித்தியாசமான சுழலில் (என்னை சுற்றி வாண்டுகள் நிரம்பி இருந்தார்கள்) படம் பார்த்தது இதுவே முதல் முறை எனலாம்...

படத்தின் பெயர் போடும் பொழுதே நம்மை நமது சிறுவயதிற்கு அழைத்து சென்று விடுகிறார் இயக்குனர்... ஜீவா,பக்கடா,குட்டி மணி இவர்களின் என்ட்ரி பட்டையை கிளப்புகிறது திரையரங்கில்...

சிறுவயதில் நாம் அனைவருமே பைக் ஓட்டியிருக்கிறோம் டுர் டுர் என்று...நமது இந்த நிகழ்வை இயக்குனர் படத்தில் கையாண்டிருக்கும் விதத்தில்,அப்பாவின் கைப்பிடித்து செல்லும் குழந்தை போல் நாமும் படத்தில் ஒன்றிவிடுகிறோம்.....

அன்புக்கரசு IAS பைக் ஓட்டுவது போல் பாவித்து வண்டியை கிளப்ப கையை முறுக்கும் பொழுது அவன் கையிடுக்கில் சூரியனை காட்டி ஒளிப்பதிவாளர் மிடுக்காக தோன்றுகிறார்....மேலும் ஒரு காட்சியில் அப்பத்தா என்று அழைக்கப்படும் கண்ணாடி அணிந்த சிறுவனை ஜீவா மிரட்டும் பொழுது கேமராவில் மூக்குகண்ணாடியை பொருத்தி அச்சிறுவன் பார்வையில் ஜீவாவை காட்டும் விதம் சபாஷ்....

அன்புக்கரசுவின் சித்தப்பாவாக (LIC ஏஜென்ட்) வரும் மீனாச்சி சுந்தரமும் ஜீவாவின் அக்கா ஷோபிகன்னு கதாபாத்திரமும் நம் மனதில் இடம் பிடிக்க தவறவில்லை..இருவருக்குமிடையான வம்பிழுக்கும் காட்சியில் கலகலப்பிற்கு குறைவில்லை... இரு குடும்பத்திற்கும் சிறுவர்களால் சண்டை வரும்பொழுது இவர்களின் தவிப்பு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது...

இந்த சண்டையினால் தங்கள் காதல் கனவு நிறைவேறாது என்று வருந்தும் காட்சியில், நாம பழகுனதுக்கு ஒரு LIC பாலிசியாவது போட்டுக்கோ என்று மீனாட்சி சுந்தரம் சொல்லி கலகலப்பூட்டி காட்சியின் கடின தன்மையை சற்றே குறைத்தும் கமெர்சியல் படங்களுக்கான நேர்த்தியை மிகவும் லாவகமாக இந்த படத்தில் இயக்குனர் கையாண்டிருக்கிறார் என்று சொல்லலாம்...

பசிக்கும் தருனங்களில் "திங்க தேடுது" என்று பக்கடா சொல்லும் வார்த்தைகளும் ,தோள் மேல கை போடாதடா குட்டையாயிடுவேன்,ஏற்கனவே என்னையை குட்டி மணின்னு கூபிரானுங்க என்ற வசனங்களும் நம்மை எங்கோ அழைத்து செல்வது தவிர்க்க இயலாதது...

முதல் முறையாக ஒரு நல்ல பாடம் பார்த்த திருப்தியில் திரையரங்கை விட்டு வெளியேறினோம்...

சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு நல்ல பாடத்தை நாசுக்காக சொல்லிகொடுக்கும் இயக்குனரின் திறமை நம்மை மலைக்க வைக்கிறது...படம் முழுவதும் சுவாரஸ்யமான காட்சிகளால் நிறைத்து நம் மனதில் இடம் பிடிக்கிறார் இயக்குனர்...

சமீப காலமாக வந்த ஈரக்கொலை நடுங்கும் காட்சிகள் நிறைந்த படங்களை சிறுவர்களை வைத்தே கலாய்திருப்பது மிக அருமை ..

இயக்குனர் இப்படத்தில் கருப்பொருளாக கையாண்டிருக்கும் "சகிப்புத்தன்மை" யையும்....நம் எல்லோருடைய மனமும் ஏங்கிகிடப்பது ஒரு சின்ன பாராட்டுதலுக்காகத்தான் என்பதையையும் மிக இயல்பாக சொல்லியிருக்கிறார்...

இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கும் அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் இயக்குனர்-சசிகுமார் அவர்களுக்கும் இந்த சினிமா ரசிகன் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்...

பசங்க - நிஜங்க....


5 comments:

  1. எங்கே ரொம்ப நாளா ஆளை காணோம்?

    எளிதான நடையில் எழுதப்பட்ட விமர்சனம், படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இது போன்ற திரைப்படங்கள் தான் தமிழ் சினிமாவின் படைப்பு திறனை பறைசாற்றும்.

    ReplyDelete
  2. உன் தமிழ் எவ்வளவு தெளிவாக உள்ளதோ அதுபோல் பசங்க திரைப்படமும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  3. senthil excellent review and paratukkal for sundaramana tamil

    ReplyDelete
  4. வரதா,பிரதீப்,Gmbrothers தங்கள் வருகைக்கு நன்றி...படம் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்வீர்கள் என்று நம்புகிறேன்....

    ReplyDelete
  5. நல்ல இருந்துச்சு மாப்ள உன்னோட விமர்சனம் ....படம் பார்க்க தோன வச்சிருச்சு..
    பார்த்துட்டு சொல்றேன்.....

    ReplyDelete