Wednesday 23 June, 2010

ராவணன் - என் பார்வையில் .......

          
        














      ராவணன் படத்திற்கு நேற்று மாலைக்காட்சிக்கு  முன்பதிவு செய்து அலுவலக நண்பர்களுடன் புடைசூழ சென்றிருந்தோம்....ஏற்கனவே படம் பார்த்த என் நண்பரிடம் அவருடைய அபிப்ராயத்தை தெரிந்துவைத்திருந்தேன்..  படம் நன்றாக இருக்கிறது ஆனால் கதைதான் இல்லை என்று சொல்லியிருந்தார். அதனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றிருந்தேன்....


              டம் பிரமிப்பாக இருந்தது....ஒளிப்பதிவு பிரம்மாண்டம் என்றால் விக்ரமின் நடிப்பு மிரட்டல்....ரகுமானின் பின்னணி இசையும் பாடல்களும் மிக அருமை..... என்னுடைய சந்தேகம் எல்லாம் என்ன வென்றால் ,படம் காடுகளில் படமாக்கபட்டிருக்கிறது அதுமட்டுமில்லாமல் அருவியின் சாரல்களும் அடிக்கடி காட்டில் பெய்துகொண்டே இருக்கும் மழை என்று எந்த சூழ்நிலையும் படம்பிடிப்பதற்கு அவ்வளவு எளிதான சூழ்நிலை மற்றும் இடமாக தெரியவில்லை.....இப்படியிருக்கையில் இவர்கள் அருவி மழை மற்றும்  மலைகளை காட்சிபடுதியதுபோல் இதுவரை நான் பார்த்த எந்த படத்திலும் பார்த்ததில்லை.....அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது....படம் என்னை பொறுத்தவரை சூப்பர்....ஆனால் என்னுடைய நண்பர் ஏற்கனவே சொன்னதுபோலவே என்னுடன் படம் பார்த்த நண்பர்கள் சொன்னதும் "படம் பிரமாதம் தான் ஆனால் கதைன்னு சொல்லிக்க ஒன்றுமில்லாமல்   இருக்கே......" 

             பொதுவாக மணிரத்னம் படங்களில் மிக நுண்ணிய சமூக பிரச்சனையை ( ரோஜா ,பம்பாய்,உயிரே )  சொல்ல காதலை ஒரு கருவியாக கையில் எடுத்துக்கொண்டு படமாக்கப்பட்டிருக்கும்.....ஆனால் ராவணனில் மிக நுண்ணிய காதலை சொல்ல சமூக பிரச்சனையை கருவியாக எடுத்துக்கொண்டு படமாக்கியிருக்கிறார்...அதனால் சமூக பிரச்சனையை கதையாக எண்ணி படம் பார்க்க போனவர்கள் படத்தில் நேரெதிராக இருப்பதால் கதை இல்லை என்று சொல்கிறார்களோ என்பது என் கருத்து.......

        இந்த படம் திரையரங்கில் தவறாமல் பார்க்கவேண்டிய படம்......குறை சொல்லாவிட்டால்  தூக்கம் வராது என்ற காரணத்தாலும் ,மணிரத்னம் படத்தில் குறை சொல்லலும் அளவிற்கு செந்தில் வளர்ந்துவிட்டானே என்று படிப்பவர்கள் நினைக்கவேண்டும் என்ற பேரவா இருப்பதாலும்  ,சில குறைகளை சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்...பொறுத்தருள்க.... ஹி ஹி ஹி... ஆனால் கருத்துப்பிழை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை, எனக்கு குறையாக பட்ட சில காட்சிப்பிழைகள் ....

         படத்தின் ஆரம்ப காட்சியில் எறிந்த நிலையில் இருக்கும் காவலர் சடலங்களை எடுக்கும் காட்சியில் ஒருவர் கூட துர்நாற்றம் வீசுவதுபோல் மூக்கை மூடவில்லை...மிக சாதாரணமாக சடலங்களை பாயில் கொண்டுசெல்வது எனக்கு சற்று உறுத்தலாக இருந்தது....

        இன்னொரு காட்சியில் கிணற்றில் இருந்து ஒரு பெண்ணின் உடலை  கயிற்று கட்டிலில் தூக்கும்பொழுது ஒரு காட்சியில் அந்த பெண் கட்டில் கயிற்றை பிடித்திருப்பதுபோல் விரல்கள் மடிந்திருக்கும்.....  
  
புகைப்பட நன்றி:www.emmantech.blogspot.com

Monday 21 June, 2010

உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு - கோவை

Photos taken on 19th June 2010