Saturday 11 April, 2009

டெக்னாலஜி இம்ப்ரூவ்டு டூ மச்.....

அதிகாலை 6 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன், எப்படியும் இன்று பணத்தை ஐசிஐசிஐ வங்கியில் 9 மணிக்குள் என் சேமிப்பு கணக்கில் போட்டுவிட வேண்டும் என்று அவசரமாக கிளம்பி, வண்டியை கிளப்பிக்கொண்டு திருச்சி சாலையில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு 8 மணி அளவில் சென்றுவிட்டேன் வங்கியை திறந்து இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்......

வங்கியும் திறந்தே இருந்தது கண்டு சுக்கிரன் என் பக்கம் தான் என்று உள்ளே நுழைந்து சலானையும் பூர்த்தி செய்து விட்டாயிற்று ஆனால் அங்கு காசோலை டெபாசிட் செய்யும் தானியங்கி எந்திரத்திற்கு நிற்கும் வரிசையை தவிர யாரும் இல்லை....எண்ணிய பணத்தையே 101 வது தடவையாக எண்ணியாயிற்று, சலானையும் சரிபார்தாயிற்று ஆனால் அலுவலர்களை காணவில்லை....

பொறுமையிழந்து வங்கி வாயிலில் நின்றியிருந்த காப்பாளரை விசாரித்ததில், அவர் உள்ளே நிற்கும் வரிசையில் நின்று பணத்தை தானியங்கி எந்திரத்தில் செலுத்த சொன்னார்...அப்பொழுதுதான் புரிந்தது அது காசோலை செலுத்தும் எந்திரம் இல்லை பணம் செலுத்தும் தானியங்கி எந்திரம் என்று....

அவசரமாக உள்ளே சென்று பார்த்தபொழுது வரிசையில் நாலைந்து பேரும் , அட்டு பசங்களுக்குத்தான் லட்டு மாதிரி பெண்டாட்டி கிடைப்பாள் என்பதை மெய்யாக்கும் விதமாக ஒரு ஜோடியும் நின்று கொண்டிருந்தது...அவசரமாக வரிசையில் நிற்க முயன்றபொழுது இடுப்பில் கைலியும் முகத்தில் கிலியுடனும் வந்த ஆசாமியால் பின்னுக்கு தள்ளபட்டேன்....

வரிசை முன்னேறிக்கொண்டு இருந்து, ஒரு பிரதிநிதி தானியங்கி எந்திரத்தில் பணம் செலுத்த உதவி செய்துகொண்டு இருந்தார். ஆசுவாசப்படுத்திக்கொண்ட கிலி ஆசாமி என் கையில் இருந்த சலானை கவனித்துவிட்டு, இதுக்கு எதுவும் வேண்டாம் தம்பி என்று நமட்டு சிரிப்பு சிரித்தார் .... அதனால் சலானை மடித்து சட்டை பையில் வைத்துக்கொண்டு வரிசையை கவனித்தேன்...அந்த ஜோடி வைத்ததில் ஒரு ஐநுறு ரூபாயை எந்திரம் அடையாளம் கண்டுகொள்ள முடியாதலால் மீதமுள்ள பணத்தை மட்டுமே செலுத்த முடியும் என்று பிரதிநிதி சொல்லக்கேட்டது என் மனதை சற்றே மகிழ்வித்தது.....

நமக்கும் இது நடந்து விடக்கூடாது என்று அவசரமாக இரண்டு மூன்று நோட்டுக்களை அதிகமாக எடுத்துக்கொண்டு இருந்தபொழுது , கிலி ஆசாமிக்கு பணம் செலுத்த அந்த பிரதிநிதி உதவி செய்துகொண்டு இருந்தார்... நேரம் கரைந்து கொண்டு இருந்தது , 9 மணிக்கெல்லாம் இங்கிருந்து கிளம்பினாள்தான் அலுவலகத்திற்கு 9.30 மணிக்குள் செல்ல முடியும் என்று நினைத்துகொண்டிருக்கும் பொழுது பிரதிநிதி சத்தமாக கிலி ஆசாமியிடம் என்னமோ சொல்லிகொண்டிருந்தார்.....

" யோவ் இதுக்கு சலான் தேவை இல்லைதான் ஆனா யாருக்கு பணம் போட வேண்டுமோ அவருடைய வங்கிகணக்கு எண் கூட இல்லை என்றால் எப்படீங்க பணம் போட முடியும் ".... என்று சொல்லிக்கொண்டே என் பணத்தை வாங்கி எந்திரத்தில் செலுத்தி வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்ததுதான் தாமதம் உடனே குருஞ்செய்தி ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வந்து விட்டது என் கணக்கில் அந்த பணம் வந்து விட்டதாக.........

சாதனை புரிந்துவிட்ட மமதையில் வண்டியில் சாகசம் புரிந்துகொண்டு அலுவலகம் அடைந்துவிட்டேன் முதல் ஆளாக..........

9 comments:

  1. /*****
    எண்ணிய பணத்தையே 101 வது தடவையாக எண்ணியாயிற்று,
    *****/

    உண்மை...

    நல்ல பதிவு. உங்கள் எழுத்துகளின் உயர்ந்து கொண்டே செல்கின்றது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. " தரம் " என்ற வார்த்தையை எழுத தவறி விட்டேன் என் முந்தைய பின்னோட்டத்தில்.(இதனால் என்னை தரம்தாழ்த்தி நினைத்து விட வேண்டாம் )

    நல்ல பதிவு. உங்கள் எழுத்துகளின் தரம் உயர்ந்து கொண்டே செல்கின்றது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அன்றாடம் நாம் சந்திக்கும் விஷயங்களை நகைச்சுவையாக எழுதுவது நல்ல முயற்சியே. ஆனால் இந்த பதிவு மிகவும் மொக்கையாக இருந்தது. மன்னிக்கவும்.

    ReplyDelete
  4. மொக்கையாக உங்களுக்கு தோன்றினால் மன்னிக்கவும்....வரும் பதிவுகளில் தவிர்க்கும் உபாயத்தை கண்டறிகிறேன்...

    பிரதீப்,அரசு தங்களின் வருகைக்கு நன்றி....

    ReplyDelete
  5. pretty ordinary
    pls try to improve

    senthil kumar subramanian
    coimbatore
    now in bahrain

    ReplyDelete
  6. மொக்கை இல்ல, இப்படி மிசினில் பணம் கட்டும் வசதி
    icici வங்கியில் இருப்பது பலபேருக்கு தெரியாது. நமக்கு வங்கிக்கணக்கு இல்லையென்றால்க்கூட பணம்
    பெறுபவருக்கு இருந்தால் போதும்.

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. நல்ல பதிவு. மொக்கை இல்ல.

    ReplyDelete
  8. it is informative and words are good

    ReplyDelete